so:text
|
முஸ்லிம் என்ற முறையில் இஸ்லாமிய மதத்திலும், பண்பாட்டிலும் எனக்குத் தனிப்பட்ட அக்கறை உண்டு. அவற்றுள் எவ்விதக் குறுக்கீட்டையும் நான் பொறுக்க மாட்டேன். ஆனால் இவைகளுடன் கூட வேறு சில கொள்கைகளும் எனக்கு உண்டு. அவை இன்றைய வாழ்க்கை நிலையும் தரமும் என் மேல் சுமத்தியவை. இஸ்லாமியப் பண்பு அவற்றை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. வழி காட்டியாக அவற்றில் முன்னேற எனக்குத் துணையாய் நிற்கிறது. ஒரு இந்தியன் என்பதில் நான் பெருமையடைகிறேன். இந்தியாவின் புனரமைப்பில் எனக்குள்ள முக்கியப் பங்கை நான் கைவிடத் தயாராயில்லை. — (ta) |