so:text
|
நான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன். (ta) |