so:text
|
அந்தக் காலத்தில் நான் படித்த புத்தகங்களுள் என்னுடைய நடத்தையையும் பிற்கால வாழ்க்கையையும் ஒழுங்கு படுத்தியது பிர்டெளசி என்பவர் எழுதிய ஷானாமாவைத் தவிர, ஸொரோஸ்ட்ரியர்களுடைய கடமைகள் என்னும் குஜராத்தி புத்தகமுமேயாகும். மனம், வாக்கு, செய்கை ஆகிய இவைகள் தூய்மையாக இருக்கவேண்டும் என்பதே நான் அவைகளிலிருந்து அறிந்து கொண்ட கற்பனைகளாகும். ஆனால் நான் அதிகமாய்ப் படித்து மகிழ்ச்சியடைந்தது ஆங்கில நூல்களே. வாட் என்பவர் எழுதியுள்ள ‘மன வளர்ச்சி’ என்னும் நூலைப் படித்ததில், எப்படி எழுதவேண்டும், எழுதுவதில் நடை எப்படி இருக்க வேண்டும் என்பது விளங்கிற்று. அதாவது, ஒரு சொல்லைப் பயன்படுத்த வேண்டிய இடத்தில் தேவையில்லாமல் பல சொற்களைப் பயன்படுத்தாமல் இருப்பது, தெளிவாக எழுதுவது ஆகிய இவைகளே. — (ta) |