so:text
|
அரக்குவேலியில் படப்பிடிப்பில் இருந்த போது, ராத்திரில அவரோட துணைவியைப் பத்தி எழுதின கட்டுரையைப் படிச்சு அழுதேன். பதினாலு வருஷம் கழிச்சு, பொண்டாட்டி பிறந்த நாளைக் கண்டுபிடிச்சு, புடவை வாங்கிக் குடுத்தாரு. இன்னிக்கு பொறந்த நாளு - கட்டிக்கன்னு... 'என் பொறந்த நாளு எனக்கே தெரியாது. ஏன் பொறந்தோம்னு நினைக்கிற நாளைப்பத்தி நான் என்னிக்குமே நினைக்கறதில்லை. இதெல்லாம் கொண்டாடக்கூடிய நாளா? புடவையெல்லாம் வேண்டாம்' என்று மறுத்தார்... இதைப் படித்த போது விக்கி விக்கி அழுதேன். - "இது ராஜபாட்டை அல்ல" புத்தக வெளியீட்டு விழாவில் மனோரமா அவர்கள் கூறியது. (ta) |