so:text
|
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியா தன்னுடைய அன்பையும் அறிவையும் கொண்டு வந்து சீனாவின் வாயிலில் நின்றபோது, பெளத்த ஆசாரியார்கள் உங்களுடன் சகோதர முறையில் சேர வந்தார்கள். அந்தப் பிணைப்பு இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது அது சீன மக்கள் உள்ளத்தில் நீறு பூத்த நெருப்புப் போல் இருக்கிறது. பல நூற்றாண்டுகளின் அலட்சியத்தாலும் அடிமைத்தனம் காரணமாகவும் அந்தத் தொடர்பு இப்போது காடு மண்டிய வழிபோல ஆகிவிட்டது. ஆனால் அந்த உறவின் அடையாளங்கள் இப்போதும் காணக் கிடைக்கும். அத்த உறவுப் பிணைப்பை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்திருக்கிறேன். — (ta) |