so:text
|
பலவிதமான சட்டங்களை இயற்றி நீதியைக் கட்டுபபடுத்துவதும், நீதிபதிகளையே அதிகம் நம்பி விட்டுவிடுவதும். ஒன்றுக் கொன்று எதிர்ப்பக்கங்களிலுள்ள இரண்டு பாறைகள்: இந்தப் பாறைகளின்மீதே சட்டங்களியற்றுவோரின் அறிவு மோதி உடைந்துவிடுகின்றது. முதல் விஷயத்தில், போர்வைகளால் மூச்சுத் திணறி இறந்து போன சக்கரவர்த்தியை உதாரணமாய்க் கூறலாம்; குளிரைக் காப்பதற்காகவே அவருக்குப் போர்வைகள் போடப்பெற்றிருந்தன; மற்ற விஷயத்தில், எதிரிகளிடம் தன் கோட்டைகளை விட்டுவிட்ட நகரத்தை உதாரணமாகக் கூறலாம். அந்நகர மக்கள் தாங்கள் தைரியத்தை மட்டுமே நம்பியிருப்பதாகக் காட்டிக்கொள்ளவே அப்படிச் செய்தார்களாம். (ta) |