so:text
|
நாம் எண்ணுவதிலும் அதிகமாய், உலகத்தில் சாதுக்களும் பெரியோர்களும் இருக்கலாம். ஆனால் அவர்களுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்க, நாமெல்லாம் மனம் வருந்துவதேன்? ஒருவனுடைய புகழ்நிலையானதா என்பதை நீ அறிய விரும்பினால், பெரிய நூல் நிலையத்திற்குப் போ. உண்மையான நிலைபேறென்பது, ஒருவனது மிகச் சிறந்த செயல்களேயாகும். ஆகையால், இராஜாராம் மோகன்ராய் என்னும் இம் மகாபுருஷனுடைய வரலாற்றைப் படித்து நாமும் நற்குணமும் நன் முயற்சியும் உடையவர்களாய், ஒன்றான பரமாத்துமாவை அன்புடன் உபாசித்து, அவரது கைங்கரியமாகிய நற்செயல்களைச் செய்து நமது வாழ்நாளைப் பயனுள்ளதாய்ச் செய்யும்படி முயலுவோமாக. —மாக்ஸ் முல்லர் (ta) |