so:text
|
எனது தீதற்ற வாழ்வே நான் கூறும் தகுந்த எதிர்வாதமாகும். யான் யாது சொல்வதென்பதைப் பற்றிச் சற்று நினைத்தால், அசரீரி என்னைத் தடை செய்கின்றது. இதனால், நான் இறந்துபடுவது கடவுளுக்குச் சம்மதந்தானென்பது வெளியாகின்றது. இதுகாறும் குணத்திலும் அறிவிலும், ஒழுக்கத்திலும் சிறந்து, நண்பர் பலராலும் போற்றப்பட்டுத் திருப்தியுடனே காலத்தைக் கழித்து வந்தேன். எனது ஆயுள் இன்னும் பெருகுமாயின், யான் மூப்படைந்து, பார்வை குன்றி, காது கேளாது, அறிவு கெட்டுப்போய், எனது வாழ்க்கையையே வெறுத்துரைக்க நேரிடும். எதிரிகள் வேண்டுகிறபடி மரண தண்டனையை எனக்கு விதித்தார்களேயாயின், அதனால் எனக்கு அவமானமொன்றும் ஏற்படாது. (ta) |